மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சி.பி.எஸ்.இ.பள்ளியான பத்ம ஷேசாத்ரி பள்ளியை மாநில அரசின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
10-ம் வகுப்பு மானவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என ஆலோசித்து வருவதாகவும், அதற்கு பிறகே 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்குமெனவும் தெரிவித்தார்.