வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி திண்டுக்கலில் கன முதல் மிக கனமழையும், குமரி, தென்காசி, மதுரை, நீலகிரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மற்றும் சில டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் மைலாடியில் 24 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கம் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.