தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தொற்று உள்ளவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் 3 கிலோ மீட்டர் தூரம் மருத்துவ ஊழியர்கள் அலைக்கழித்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
மன்னார்குடியை சேர்ந்த பாலுமகேந்திரன் கொரோனா சிகிச்சை பெற கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு படுக்கை வசதி இல்லை என்றும் கோவிலாச்சேரி சிகிச்சை முகாம்க்கு செல்லும்படி மருத்துவமனை ஊழியர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராததால் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற பாலுமகேந்திரன் குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல், தனியார் ஆம்புலன்சை வசதி ஏற்படுத்தி தந்தும், ஆம்புலன்சுக்கு தர பணமும் வழங்கி சிகிச்சை மையத்திற்கு செல்ல உதவியுள்ளார்.