செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்... சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

May 25, 2021 02:03:54 PM

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர்,  மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளான். 

சென்னை கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் உருவாக்கிய பத்மா சேஷாத்ரி பால பவன் என்ற சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வணிகவியல் ஆசிரியராக உள்ள ராஜகோபாலன் என்பவன், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. சில மாணவிகளிடம் செல்போன் எண்களைப் பெற்று அவர்களுக்கு வீடியோ கால் செய்வது போன்ற தொந்தரவுகளிலும் ராஜகோபாலன் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் துணிச்சலுடன் பதிவிட்டார்.

அத்தோடு மாணவிகளிடம் ராஜகோபாலன் ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக நடந்து கொள்வது தொடர்பான வாட்ஸ்ஆப் சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் அந்த மாணவி வெளியிட்டார். ஊரடங்கு காலத்தில் நடந்த ஆன்லைன் வகுப்புகளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரைகுறை ஆடையுடன் தோன்றியும் மாணவிகளை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளான்.

இதனை அடுத்து ராஜகோபாலனால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக மேலும் சில மாணவிகள் சமூக வலைதளங்களில் புகார்களை வெளியிட ஆரம்பித்தனர். கடந்த காலங்களில் அதே பள்ளியில் பயின்ற மாணவிகளும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தங்கள் மோசமான அனுபவங்களைப் பகிர்ந்தனர். 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலஷ்மி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராஜகோபாலன் மற்றும் அவனது தாய், மனைவி ஆகிய மூவரும் வடபழனி காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அவன் பயன்படுத்திய செல்போன், லேப்-டாப் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்த போலீசார், சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்டெடுத்தனர். பல மணி நேரம் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் அவனை போலீசார் கைது செய்தனர்.

ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வருமாறு, மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புகார் கொடுக்கும் மாணவிகளின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என உறுதி கொடுத்துள்ள காவல்துறை, எவ்வித அச்சுறுத்தலும் வராது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலஷ்மி -ஐ 9444772222 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மாணவிகளின் புகார் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தொலைபேசியில் விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர், நடந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவிகளோ, பெற்றோரோ நேரடியாக தங்களிடம் புகார் அளிக்கவில்லை என்றும், நிர்வாகமே தாமாக முன் வந்து எந்தவித சமரசமுமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் முதலில் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த நிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அப்பள்ளி அறிவித்துள்ளது


Advertisement
திருப்பத்தூர் அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் கைது
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
லிப்ட் வெல்லில் மோட்டார் பொருத்த பாதாள சாக்கடையின் உள்ளே கயிறு கட்டி இறக்கப்பட்ட ஊழியர்
நீர்நிலை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அலுவலகம் காட்டியதால் இடிக்கப்பட்டது...
வாகன தணிக்கையின் போது தலைமறைவாக இருந்த ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது
ஆளில்லாத வீடுகளில் பூட்டை உடைத்துத் திருட்டு... முகமூடித் திருடன் குறித்து போலீஸ் விசாரணை
பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டு தேடப்பட்ட 2 ரவுடிகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கைது
சொத்து நகல் கிடைக்க தாமதம் ஆனதால் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கதவைப் பூட்டிப் போராட்டம்
99 முறை பைபர் கேபிள் திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர்
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த துணிக்கடை உரிமையாளர் கைது

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement