அதிமுகவின் சட்ட திட்ட விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
அதிமுகவின் அரசியல் பயணம், கட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது, தேவையற்ற கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள ஓபிஎஸ், இபிஎஸ், அதிமுகவில் தனிமனிதர் துதி பாடலுக்கு இடமில்லை என்றும், அதிமுக தலைவர்களின் பெயரில் பேரவை ஆரம்பிப்பது, தலைவர்களின் படங்களை சிதைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.