செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

4 மணி நேரமாக ஆம்புலன்சில் தவித்து.. உயிர் பிரிந்த சோகம்..! ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை விபரீதம்

May 25, 2021 01:01:05 PM

கிருஷ்ணகிரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதே ஆன கொரோனா நோயாளியை தனியார் மருத்துவமனை கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல்,  4 மணி நேரமாக ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல்  நோயாளிகள் மூச்சுத்திணரும் அவலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தமிழகத்தில் கொரோனாவின் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகின்றது. கிருஷ்ணகிரியில் 7444 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1438 படுக்கைகளில் மட்டுமே ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இதனால் ஆக்ஸிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராஜாஜி நகரை சேர்ந்த பிரேம் குமார் என்ற 34 வயதான இளைஞர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஆக்சிஜன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டதால் ஆம்புலன்சில் ஏற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காலை 8 மணியில் இருந்து ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த பிரேம் குமார் கொரோனாவின் கொடிய தாக்கத்தால் மூச்சுவிட இயலாமல் தவித்து வந்தார்

அவரது உறவினர்களும் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கையாவது கிடைத்து விடாதா ? பிரேம்குமாரின் உயிரை காபாற்றி விடமட்டோமா ? என்ற ஏக்கத்துடன் காத்திருந்தனர். ஆனால் ஏற்கனவே அவர்களை போல ஏராளமானோர் ஆக்சிஜன் படுக்கைக்கு காத்திருந்ததால் பிரேம் குமாருக்கு படுக்கை கிடைக்கவில்லை

இந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் தீர்த்து விட்டதால் கடுமையான ஜீவ மரண போராட்டத்தை சந்தித்த இளைஞர் பிரேம்குமார் ஆம்புலன்சிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்

பிரேம்குமாரின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று அவரது உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானதால் கடும் மன உளைச்சல் அடைந்தனர்

பிரேம்குமார் மட்டுமல்ல பல நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மூச்சுத்திணறி பலியாவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதி அமைத்துக் கொடுக்க சுகாதாரதுறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement