கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றும் இரவில் தொடங்கிய மழை விடிய விடியப் பெய்தது. அதிக அளவாகக் குழித்துறையில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து நொடிக்கு ஆயிரத்து 750 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 77 அடி உயரமுள்ள பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 65 அடியை எட்டியுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.