காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது இன்றியமையாப் பொருட்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு நாளை முதல் ஒருவாரக் காலத்துக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் காய்கறிகளைக் கூடுதல் விலைக்கு விற்பதாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கமான விலைக்குக் காய்கறிகளை விற்க வணிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதுடன், இது குறித்து ஆய்வு செய்ய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.