தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கூலர் இயந்திரந்தில் ஏற்பட்ட கோளாறு சீர் செய்யப்பட்டு கடந்த ஒருநாளில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 33 புள்ளி 4 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் கேஸ் நிறுவனங்களின் மருத்துவ பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.