தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நேற்றை ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. அதேநேரம்,கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 25ஆயிரத்து 776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 19 வயது ராமநாதபுரம் இளைஞர், 24 வயது
மதுரை இளம்பெண், 90 வயது கோவை முதியவர், 92 வயது திருச்சி மற்றும் மதுரை முதியவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 448 பேர் பலியானார்கள்.
சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 24 வயது இளம்பெண், 93 மற்றும் 94 வயது முதியவர்கள், 95 வயது மூதாட்டி உள்படஒரே நாளில் 86 பேர், கொரோனாவால் உயிரிழந்தனர்.
சென்னையில் புதிதாக 5,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3,165 பேரும் செங்கல்பட்டில 1,954 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு - 1,758 , கன்னியாகுமரி -1,621 , திருவள்ளூர் - 1511, திருப்பூர் - 1,466, , மதுரை - 1,352 திருச்சி - 1,351 ,விருதுநகர் - 1287 மற்றும் காஞ்சிபுரத்தில் 1,017 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள், 1404 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மாநிலம் முழுவதும் 2,84,278 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.