தமிழகத்தில் தடுப்பூசி பற்றாகுறை இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 11 லட்சம் தடுப்பூசி வந்திருப்பதாகவும், அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை பார்க்க, உடன் இருந்து கவனித்துக் கொள்ள அவர்களது உறவினர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ள கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.