செங்கல்பட்டு மருத்துவமனையில் , கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் சிகிச்சை முறை நல்ல பலனை கொடுத்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோளிகளுக்கு கொடுக்க டி.ஆர்.டி. ஓ சார்பில் 2-டியோக்சி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என பெயரிடப்பட்டுள்ள பவுடர் வடிவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் கரைத்து குடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து 3 கட்ட மருத்துவ சோதனையிலும் வெற்றிகரமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி தந்தது.
பொடியாகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எளிதாக தண்ணீரில் கரைத்து இதை குடிக்க முடியும். கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள இந்த 2-டிஜி மருந்து கொரோனா நோயாளிகளுக்கு விரைவாக குணமடைந்தனர். இந்த மருந்து ஆக்சிஜன் தேவையை சரியாக வைத்திருப்பதும் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கொரேனா வைரசுக்கு எதிரான போரில் மிக முக்கியமான மைல்கல் சாதனையாக 2-டிஜி மருந்து பார்க்கப்படுகிறது. 10 ஆயிரம் பாக்கெட் மருந்துகள் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்து சோதனைக்கு அனுப்பப்ட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இந்த மருந்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மருத்துவமனையில் டாக்டர். வினோத்குமார் ஆதிநாரயணன் நோயாளிகளுக்கு மருந்தை தண்ணீரில் கரைத்து கொடுத்து சோதனையில் ஈடுபட்டார். 110 நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டு, அது மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர். வினோத்குமார் ஆதிநாராயணன் , டாக்டர். ரெட்டீஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி.ஆர்.டி. ஓ இந்த மருந்தை தயாரித்துள்ளது. நோயாளிகளின் உடைக்கு ஏற்ப, மருந்து கலந்து கொடுக்க வேண்டும்.காலை, மாலை இரு வேளை கொடுக்கப்பட்டது. அதில், மருந்து சிறப்பாக செயல்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மருந்து கொடுக்கப்பட வேண்டும்.சர்க்கரை நோய் கட்டுக்குள் உள்ளவர்களுக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம் என்கிறார்.
தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறை வெற்றி பெற்றுள்ளதால், கொரோனா உயிரிழப்பை வெகு வேகமாக கட்டுப்படுத்த முடியும் என்கிற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.