மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
வழக்கமாக மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் வீட்டுக்கு வந்து மின் நுகர்வை கணக்கெடுத்துக் கொள்வார். இந்த நிலையில், மே மாதத்துக்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம்.
சுயமாக மதிப்பீடு செய்து புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப், இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி வைக்கலாம். நுகர்வோர் அனுப்பிய விவரங்களை சரிபார்த்து, 100 யூனிட்டுக்கான கட்டணத்தை கழித்துவிட்டு, எஞ்சிய கணக்கீட்டுக்கான தொகை சம்மந்தப்பட்டோருக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டணத்துக்கான தொகையை இணைய வழியிலேயே செலுத்தலாம்.
மின் நுகர்வு கணக்கீட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் இருந்தாலோ மீண்டுமொரு முறை மின்வாரியப் பணியார்கள் ரீடிங் எடுப்பார்கள்.