கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் முதலான அனைத்து விவரங்களையும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு ஈஷா நிறுவனர் சத்குரு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மேற்கொள்ள வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள், இணையப் பதிவேற்றம் குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இது சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள சத்குரு, அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளை ஏற்றுத் துரித நடவடிக்கை எடுத்ததற்குப் பாராட்டுக்கள் என்றும், வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.