தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தேர்தல் பிரச்சாரம் செய்ய இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.