கொடைக்கானலில் மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஊருக்குள் வந்தது போல் போலீசார் நடத்திய நாடகத்தால் பொதுமக்கள் அலறியடித்து தலைதெறிக்க ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் கொரோனாவின் 2-வது அலை கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், பாரம்பரிய கலைகள் மூலம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சற்று வித்தியாசமாக யோசித்து கொடைக்கானல் போலீசார் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தால், பொதுமக்கள் அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பி வந்தது போல் நபர் ஒருவர், கொடைக்கானலின் முக்கிய பகுதியான நாயுடுபுரம் பகுதியில் வலம் வந்தார். கையில் குலுக்கோஸ் பாட்டிலுடன் சுற்றிய அந்த நபரைக் கண்டு பொதுமக்கள் அஞ்சி ஓடினர்.
அந்த நபரும் கொரோனா நோயாளியான தன்னைக் காப்பாற்றுங்கள் என அங்கிருந்தவர்களிடம் கெஞ்சவே, அவர்கள் கையில் இருந்த பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு பீதியடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இறுதியாக பரபரப்பு அதிகமானதால், அது கொரோனா குறித்து மக்களிடையே அச்சத்தை உண்டாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நாடகம் என போலீசார் தெரிவித்தனர்.
கொரோனா நோயாளி போல் வேடமிட்டிருந்த நபர் மக்கள் கொம்பால் விரட்டி, வேறெந்த பொருட்களையும் தொடக்கூடாது என மிரட்டுவது போன்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன.