செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழந்தைகளுக்கு ஆபத்து..!

May 17, 2021 09:51:20 AM

கொரோனா பெருந்தொற்றால் குடும்பத்தினரை இழந்து தவிக்கும் குழந்தைகளை தத்தெடுத்து கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது போன்ற நிலையில் உள்ள குழந்தைகள், கடத்தல் கும்பலிடம் சிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு குடும்பத்திலும் உறுதுணையாக இருந்த பலரையும் இழந்திருப்பது போல, குழந்தைகள் ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறும் அவல நிலையும் நடந்து வருகிறது. அவ்வாறான குழந்தைகளுக்கு உதவுவதாக நினைத்து பலரும் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்புகின்றனர்.

சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலில் "கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள 2 வயது பெண் குழந்தையையும், 2 மாத ஆண் குழந்தையையும் யாராவது தத்தெடுத்து கொள்ளுங்கள்" என குறிப்பிட்டு உறவினர்கள் தொடர்பு எண்ணையும் பகிர்ந்துள்ளார். இதே போன்று பிறந்து மூன்றே நாளான பெண் குழந்தையும், 6 மாத குழந்தையும் கொரோனாவால் பெற்றோரை இழந்திருப்பதாகவும் நல்ல மனம் படைத்தவர்கள் தத்தெடுத்து கொள்ளுங்கள் என பல குறுஞ்செய்திகள் பரவி வருகிறது. இப்படியாக சமூக வலைதளங்களில் பகிரும் பல குறுஞ்செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் அவ்வாறான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் தீங்கு இது என எச்சரிக்கின்றனர் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள். 

ஆதரவற்ற குழந்தைகளை ஒப்படைக்க அந்தந்த மாவட்டங்களில் அரசு அமைப்புகளான குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை நல கமிட்டிகள் செயல்படுகின்றன. அல்லது 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து தெரிவித்தால், அரசு சட்டப்பூர்வமாக தத்தெடுக்க பதிவு செய்திருப்பவர்களிடம் ஒப்படைக்கும். இவற்றை தவிர்த்து சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அனுப்பினால், அந்த குழந்தைகளை தத்தெடுத்து கொள்வதாக அணுகும் நபர்கள் குழந்தை கடத்தல் கும்பலாகவும் இருக்கலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.

உண்மையில் இந்த தகவலை பகிரும் பலரும் அந்த குழந்தைகளின் நலன் கருதியே பகிர்ந்தாலும், அதன் பின்விளைவு குழந்தைகளுக்கு ஆபத்தானது என உணர வேண்டும் என்கின்றனர் காவல் துறையினர்.

அதே வேளையில் இந்த பேரிடர் காலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை வைத்து ஆதரவற்ற நிலையில் குழந்தைகளை மீட்டு, அரசு பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் முன் வைத்துள்ளனர்.


Advertisement
எஸ்.பி.ஐ வங்கிக் கொள்ளை முயற்சி வழக்கில் கைதான இளைஞர்
அரசு நூலகத்தையே தங்கும் விடுதியாக பயன்படுத்தி வரும் பிற மாநில பணியாளர்கள்
பிரேக் பழுதானதால் ஓட்டுநரின் சமயோசிதத்தால் மரத்தில் மோதி நிறுத்தப்பட்ட சுற்றுலா வேன்
கோவை, ஆவாரம்பாளையத்தில் ம.தி.மு.க. அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம்
கடலூரில் கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து மயானம் அமைத்துத் தரக் கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
வாக்கி டாக்கியுடன் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி ஆபீசர் வசூல் வேட்டை...
கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலன் இன்றி பலி
நிலத் தகராறில் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகப் போலீசாரைக் கண்டித்து புகார்
தனியார் தொழிற்சாலையில் இரும்பு கொதிகலன் வெடித்து விபத்து உத்தரப்பிரதேசத்தைச் தொழிலாளிக்கு பலத்த தீக்காயம்

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement