தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.
கடந்த 1-ந் தேதி தொடங்குவதாக இருந்த 18 முதல் 44 வயதிற்குற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வயதினருக்கு தடுப்பூசி செலுத்த தோராயமாக 5 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. இதில், ஒன்றரை கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. தடுப்பூசி கொள்முதல் தொடர்பான டெண்டர் எடுப்பதற்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களில் இந்த தடுப்பூசிகளை சப்ளை செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.