தூத்துக்குடியில், தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மில்லர் புரத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடியில், இதுவரை 80 ஆயிரம் பேர் கொரொனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும், கிராமங்கள் தோறும் நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து, அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.