பூங்கொத்து, பொன்னாடை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சொந்த மாவட்டங்கள், தொகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை மீறி வரவேற்பு வளைவு, பதாகைகள் வைப்போரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.