முன்கள வீரர்களாக கடமையாற்றுவோர் மிகுந்த எச்சரிக்கையுடனும் உரிய பாதுகாப்புடனும் செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்லாவரம் உதவி காவல் ஆணையர் ஈஸ்வரன் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனைப்படுவதாக தமது இரங்கல் செய்தியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரனின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்கள வீரர்களாக கடமையாற்றுவோர் பாதுகாப்புடன் பணியாற்ற முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.