ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் ரெட்டீஸ் லேப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்படவிருப்பதாகவும், மொத்தமாக 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவிருப்பதாகவும் நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த ஒன்றாம் தேதி ரஷ்யாவிலிருந்து முதற்கட்டமாக 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இந்தியா வந்த நிலையில், நாளை மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வரவுள்ளது.