தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதை முறைப்படுத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் இந்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவை அடிப்படையில் எந்தெந்த மருத்துவமனைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து இந்த குழு முடிவு செய்யும்.
இதனிடையே, குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன ஆலோசனை நடத்தினர்.