கொரோனா தடுப்பூசி, மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய, நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை மற்றும் மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்படவேண்டிய அரிசின் மானிய தொகைகளை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் மேல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்ய சிறப்பு நிதியுதவி அளிக்கவும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில் இருந்து மேலும் 1% உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.