செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரபிக்கடலில் உருவாகிறது புயல்..!

May 13, 2021 08:45:33 PM

அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே உருவானது. இது அடுத்த 28 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 15,16 ஆகிய தேதிகளில் புயலாக உருமாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல், குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பெரும்பாலும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

புயல் உருவாவதின் எதிரொலியாக, நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். நாளைய தினம் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

15-ம் தேதி நிலவரப்படி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 16-ம் தேதி மிக கனமழையும், 17-ம் தேதி கனமழையும் பெய்யக்கூடும்.

இதனிடையே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement