மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிச்சந்தையில் விற்பனை செய்த ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், ரெம்டெசிவிர் மருந்தை குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்து வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வீடியோ வெளியானது.
சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 வயால்கள் கொண்ட ரெம்டெசிவிர் மருந்து 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறப்பு மையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் பணிநீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.