தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில், தலா 30 மாவட்டங்களில், கொரோனா தொற்று 10 சதவிகிதத்தை விடவும் அதிகமாக உள்ளது.
கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தலா 20 மாவட்டங்களில் இந்த நிலை காணப்படுகிறது. கேரளா, டெல்லி உள்ளிட்ட மேலும் 8 மாநிலங்களில் தலா 10 க்கு மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று 10 சதவிகித த்தை தாண்டி நிற்கிறது.
தொற்று விகிதம் 10 ஐ தாண்டினால் அந்தந்த மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கோவா, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று விகிதம் அபாயகட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.