தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஞாயிற்றுகிழமையும் கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில் வருகிற 15-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க கடந்த 2 நாட்களாக வீடு வீடாக மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுகிழமையும் மக்களுக்கு டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதோடு இதற்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.