தான் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும் தன்னை மகிழ்விப்பதாக எண்ணி, தன்னுடைய நூல்களை அரசு செலவிலோ அல்லது சொந்த செலவிலோ வாங்கி பூங்கொத்துக்கு பதிலாக பரிசாக விநியோகிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை மீறி, அரசு செலவில் புத்தகம் வாங்கியிருந்தால் தொடர்புடைய அதிகாரியிடமிருந்து அந்த தொகை வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும் என்றும் இறையன்பு ஐஏஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.