பிளஸ் -டூ மாணவர்கள் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு,க, ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படுமென தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை - தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தற்போதையசூழலில் மாணவர்களின் நலனே மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது என விவரங்களை கேட்டறியுமாறு, உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் கூறினார்.
நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.