சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக எம்.பி.க்கள் கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் தங்களது எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு மன்றங்களிலும் பதவி வகிக்க முடியாது என்பதால், ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினராக தொடர வைத்திலிங்கத்துக்கு ஓராண்டு காலமும், கே.பி.முனுசாமிக்கு ஐந்து ஆண்டு காலமும் மீதமுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், எம்.பி. பதவியை இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். மாநிலங்களவை தலைவர் அலுவலகத்தில் அவர்களது உதவியாளர்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.