தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை மக்களே நேரடியாக பெற்றுக் கொள்ள முதலில் சென்னையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.
இங்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் சேலம், நெல்லை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களின் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது.
சேலத்தில் ரெம்டெசிவிர் வாங்க ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்ட நிலையில், இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
மதுரை, நெல்லை, கோவையிலும் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிந்துரைக் கடிதம், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்று, சி.டி.ஸ்கேன் சான்று உள்ளிட்டவற்றை காண்பித்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுச் செல்கின்றனர்.