தமிழகத்துக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 20 ஆயிரம் குப்பிகள் என்னும் அளவில் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றால் நுரையீரல் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு ஏழாயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருவதால் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
ஒரு நாளைக்குக் குறைந்தது 20 ஆயிரம் குப்பிகள் என்கிற அளவில் ஒதுக்கீட்டை உயர்த்தும்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோரிக்கையைப் பரிசீலித்து ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார்.