தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
திமுக சார்பில் 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நாளை சட்டப்பேரவை கூடும்போது புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.