செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மீண்டும் முழு ஊரடங்கு..! பகல் 12 வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பு

May 09, 2021 08:29:58 PM

மிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது. அதேநேரம் பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது. ஆட்டோ - டாக்சிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது, இங்கு, ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது, ஆனால், பிற கடைகளை திறக்க அனுமதி கிடையாது,

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. சாலை ஓர கடைகளுக்கு அனுமதி கிடையாது.

முடிதிருத்தும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது, ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கும், பெட்ரோல் நிலையங்கள் முழுமையாக இயங்கும்,அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும், திருமணத்தில் 50பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்,

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது,

இதனிடையே, திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர், 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


Advertisement
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்... நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்


Advertisement