முழு ஊரடங்கு காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப் பதிய வேண்டுமே தவிர வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது எனத் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
வாகனத் தணிக்கையின் போது கோபப்படாமல் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். தடியடி போன்ற பலப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்றியமையாப் பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விதிகளை மீறுவோரின் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து வழக்குப் பதியலாம் என்றும் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் வாகனங்களைச் சில மணி நேரத்தில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.