ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 20 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், கொளத்தூர் தொகுதியில் மீதமுள்ள 2 ஆயிரத்து 200 பேருக்கும் தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாடையையும் பரிசுப் பொருட்களையும் வழங்க உள்ளனர்.