கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவித்திருப்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் செயல்படும் என்றும், மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளதை வரவேற்றுள்ளார்.
அதே சமயம் ஏழை எளிய பொதுமக்கள் மருத்துவச் சிகிச்சை மற்றும் இன்றியமையாத் தேவைகளுக்காகச் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.