கர்ப்பிணி மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் பச்சிளம் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை போட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கவில்லை.
கர்ப்பிணி மற்றும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால், அந்த ஆன்டிப்பாடிகள், கருவில் உள்ள சிசுவுக்கும் செல்லும் என்பதால் பிறக்கப்போகும் குழந்தையும் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெரும் என முதலில் சொல்லப்பட்டது.
இதுவரை தடுப்பூசி போட்ட தாய்மார்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை, இருப்பினும் கர்ப்ப காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.