தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 195 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 21,546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 69 பேர் உள்பட மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு அதகபட்சமாக 195 பேர் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை பெருநகரில், மேலும் 6678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2068 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2039 பேருக்கும், புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1560 பேருக்கும், மதுரையில் 996 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 836 பேருக்கும், தூத்துக்குடியில் 796 பேருக்கும், திருச்சியில் 746 பேருக்கும் திருநெல்வேலியில் 688 பேருக்கும், வேலூரில் 614 பேருக்கும், ஈரோட்டில் 590 பேருக்கும், விழுப்புரத்தில் 466 பேருக்கும். கன்னியாகுமரியில் 445 பேருக்கும், , தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 210 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,31,468 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றுமாறு, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறைக் கேட்டுக்கொண்டுள்ளது.