செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு..!

May 06, 2021 09:42:08 PM

நாளை முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினுடன், பதவி ஏற்க இருக்கும் 33 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின், பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, காவல், உள்துறை உள்ளிட்ட துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு நீர் வளத்துறையும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறையும், ஐ பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சராகவும், எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவி முத்துசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெரியகருப்பனுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் தா.மோ.அன்பரசனுக்கு ஊரக தொழில்துறையும், எம்.பி சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அமைச்சராக கீதா ஜீவனும், மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும், போக்குவரத்து துறை அமைச்சராக ராஜகண்ணப்பனும் பதவி ஏற்க உள்ளனர். வனத்துறை அமைச்சர் பதவி கே.ராமச்சந்திரனுக்கும், உணவுத்துறை அமைச்சர் பதவி சக்கரபாணிக்கும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் பதவி வி.செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.காந்திக்கு கைத்தறித்துறையும், மா.சுப்ரமணியனுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும், பி.மூர்த்திக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பதவி ஏற்க இருக்கின்றனர்.

சா.மு.நாசருக்கு பால் வளத்துறையும், செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மையினர் நலன் துறையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதன், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக சி.வி.கணேசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறையும், கயல்விழி செல்வராஜ்க்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் 15 புதிய முகங்கள் இடம்பெறுகின்றனர்.

தமிழக அமைச்சரவை பட்டியல்

மு.க.ஸ்டாலின் - உள்துறை, பொது, பொது நிர்வாகம் ( முதலமைச்சர் )

துரைமுருகன் - நீர் வளத்துறை அமைச்சர்

கே.என்.நேரு -  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

கே.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி - கைத்தறித்துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர்

••••••••••

பி.மூர்த்தி - வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் - நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

சா.மு.நாசர் - பால் வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் 


Advertisement
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement