கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர் மீது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சந்திரசேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜங்சன் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்பொது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பிரேக் பிடிக்காததால் சாலையோரம் சின்றுகொண்டிருந்த சந்திரேகர் மீது மோதியது.
படுகாயமடைந்த சந்திரசேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆம்னி வேன் ஓட்டுநர் மரியதாஸை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.