திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 6 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வெளியில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்களை உறவினர்கள் வாங்கி வந்துள்ளனர். அதன் பின்னர் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் நிரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆக்சிஜனை நோயாளிகளின் உடல் ஏற்றுக் கொள்ளாததே உயிரிழப்புக்கு காரணம் என்றும், போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.