தமிழக முதலமைச்சராக வருகிற வெள்ளிக்கிழமையன்று பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்று மாலை, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, காணொலி மூலம் ஆட்சியர்களுடன், மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அதிகாரிகள், ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தினந்தோறும் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயாலளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.