மருத்துவக்கல்லூரிகளில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வீடியோ கால் அல்லது தொலைபேசி மூலம் ஆலோசனைகளை வழங்கவும், மருத்துவமனைகளில் கொரோனா பணிகளை ஒருங்கிணைத்தல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குரிய முதல்கட்ட ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் மருத்துவக்கல்லூரியில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணியில் ஈடுபட உள்ள 7000 மாணவர்கள் கொரோனா வார்டுகளுக்குள் பணியமர்த்தக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்ககம் நிபந்தனை விதித்துள்ளது.