சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்.
மக்கள் பிரச்சனைக்காக தன்னலம் கருதாமல் போராடும் ஹீரோக்களை சினிமாவில் பார்திருப்போம்,. ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்களுக்காக போராடிய சிலரில் டிராஃபிக் ராமசாமி முக்கியமானவர்,.
RULES பேசியே தமிழக அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நடுங்க வைத்தவர் ராமசாமி . இவர், சென்னை பாரிஸ் கார்னரில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார்,. இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அன்று முதல் ராமசாமியான இவர் ’டிராஃபிக் ராமசாமி’ என்று அழைக்கப்பட்டார். வரம்பின்றி இயங்கிய இன்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகளுக்கு எதிராகவும், பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராகவும் போராடியுள்ளார்,.
டிராஃபிக் ராமசாமி கடந்த 20 ஆண்டுகளாக , பொது நல வழக்குகள் மூலம், பல விஷயங்களை பொது வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்,. சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்குகள் காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
கண் முன்னால் என்ன தவறு நடந்தாலும் நீதிமன்றம் செல்லும் இவர், வக்கீல் வைக்காமல் தானே வாதாடும் அளவிற்கு திறமை மிக்கவர்,. அப்படிப்பட்ட ராமசாமி கல்லூரி படிப்பை கூட எட்டாதவர் என்பது கூடுதல் சிறப்பு,. ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானது,. இத்திரைப்படத்த விக்கி என்பவர் இயக்க புரட்சி இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர், அதில் டிராஃபிக் ராமசாமியாக நடித்திருந்தார்,.
இத்திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன், வீரத்தின் உச்சகட்டம் தான் அஹிம்சை. அதற்கு உதாரணம் தான் டிராஃபிக் ராமசாமி என்று பாராட்டியிருந்தார்,. வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த ராமசாமியின் உடல்நிலை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் மோசமடைந்தது,. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தனது உயிரையும் துச்சமென நினைத்து, தனி மனிதனாக போராடி வந்த ராமசாமியின் மறைவு தமிழக மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,.