தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியை 30 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக கைப்பற்றி உள்ளது.
அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராஜலெட்சுமி போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் ராஜா போட்டியிட்டார்.
மேலும் அ.ம.மு.க.,நாம் தமிழர் என 15 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் ராஜா 71,184 வாக்குகளும், அமைச்சர் ராஜலட்சுமி 65,830 வாக்குகளும் பெற்றனர்.
இதன் மூலம் ராஜலெட்சுமியை விட 5,354 வாக்குகள் கூடுதல் பெற்று ராஜா வெற்றி பெற்றார்.
கடந்த 1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கவேலு வெற்றி பெற்று அமைச்சரானார். அதன்பின்னர் 1991 முதல் தொடர்ந்து 30 ஆண்டுகள் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று வந்தது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக அந்த தொகுதியை கைப்பற்றி உள்ளது.