முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்தில், சிறுவயதில் விளையாடித் திரிந்த பிள்ளைப்பருவ நினைவுகளை மறவாமல், அண்டை வீட்டுக்கு சென்று அவர்களிடமும் வாழ்த்துப் பெற்றார்.
இன்று காலை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்படுவதற்கு வெளியே வந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக எதிர்வீட்டுக்குச் சென்றார்.
பிள்ளைப்பருவத்தில் உடன் விளையாடிக் களித்த பால்ய நண்பர்களின் வீடு என்ற வகையில், உரிமையோடு சென்ற மு.க.ஸ்டாலினை அவர்களிடம் நலம் விசாரித்தார்.
மு.க.ஸ்டாலினை சிறுவயது முதலே தெரியும் என்றும், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அவர், சிறுவயது நினைவுகளை மறவாமல் தங்களது வீட்டிற்கு வந்தது பெருமை அளிப்பதாக, அண்டை வீட்டு மூதாட்டி தெரிவித்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின், தங்கள் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அண்டை வீட்டார் தெரிவித்தனர்.