சென்னையில் காவல் உதவி ஆணையர் கேட்டதாக மளிகைக் கடையில் 10 கிலோ பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிய போலி காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டான்.
பூக்கடை, குடோன் தெருவில் உள்ள மொத்த மளிகை கடைக்கு கடந்த 21 ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், தன்னை யானைக்கவுனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனவும், பூக்கடை உதவி ஆணையர், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தலா 10 கிலோ வாங்கி வரசொன்னதாகவும் கூறி வாங்கியுள்ளான்.
பணம் வாங்கித் தருவதாக கடை ஊழியர் ஒருவரை தன்னுடன் அழைத்துச் சென்ற அவன், உயர் நீதிமன்றம் முன்பு அவரை நிற்க வைத்துவிட்டு, அவரது 22 ஆயிரம் ரூபாய் செல்போனையும் வாங்கிக் கொண்டு மாயாமாகியுள்ளான். விசாரணையில் திருவொற்றியூரைச் சேர்ந்த அசோக் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.