ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனைத்து பண பலன்களும் கிடைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடலூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஆரோக்கியசாமி ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதோடு, பணி நீக்கமும் செய்யப்பட்டார். பணிநீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பல தகுதியான திறமையான நபர்கள் தற்காலிகமாக ஒப்பந்த பணியாளர்களாக, குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரக்கூடிய நிலையில், ஊழல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், அனைத்து பண பலன்களையும் பெறுவதாக வேதனை தெரிவித்தார்.